Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 16:45:33 Hours

இலங்கை பொறியியல் படைப்பிரிவின் வெசாக் தின ‘தர்ம பிரசங்கம்’

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டீசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ்வெள்ளிக்கிழமை (5) மத்தேகொட இராணுவப் பொறியியல் படையணியில்'வெசாக் தின' சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

வெசாக் நிகழ்வில் தர்ம சொற்பொழிவு, முதியோர்களுக்கு தானம் வழங்கல் மற்றும் சிரமதானம் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. மத்தேகொட கந்த விகாரையின் பிரதம குரு வண. பம்பரகந்த ஞானநந்த தேரர் அவர்களால் தர்ம சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது, அதில் அவர் அன்றாட வாழ்வில் உளவியல் மற்றும் உயிரியல் உறவுகளைப் பேண உதவும் பௌத்த நியதியான ‘சிங்கலோவாத சூத்திரய’ தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

‘வெசாக்’ நிகழ்வின் இறுதிக் கட்டமாக, மே 05 ம் திகதி துசித முதியோர் இல்லத்தில் சிறப்பு ‘சிரமதானம்’ மற்றும் தானம் வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவப் பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 250 இற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.