20th April 2025 12:55:38 Hours
இலங்கை பீரங்கிப் படையணி தனது 137வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டாடியது.
இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வருகை தந்த இராணுவத் தளபதிக்கு பாதுகாகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையணி தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிர்மணிக்கப்பட்டுள்ள புதிய பாதுகாவலர் அறையை உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பின்னர், போர் வீரர்களின் நினைவு தூபியில் சம்பிரதாய நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசிய கீதம் மற்றும் இலங்கை இராணுவ கீதம் இசைக்கப்பட்டதுடன் விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் பல மத நிகழ்வுகள் இடம்பெற்றன. போர் வீரர்களின் உயர் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வருகை தந்த அனைவரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், இராணுவத் தளபதியுடன், இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணமடைந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புனிதமான கடைசி வாசிப்பு ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவடைந்தன.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தின் போது,இராணுவத் தளபதி இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்திலும் தனது எண்ணங்களைப் பதிவிட்டார். இறுதியில் ஆண்டு விழாவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், இராணுவத் தளபதி உத்தியோகப்பூர்வமாக வண்ண வாகனத்தை இலங்கை பீரங்கி படையணியிடம் ஒப்படைத்தார்.