09th October 2023 21:27:29 Hours
கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 3 வது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியில் மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட புதிய நினைவு தூபி இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்கே.டி.பி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துகொண்டு புதன்கிழமை (ஒக்டோபர் 4) திறந்து வைத்தார்.
கெப்டன் சாலிய அலதெனிய இலங்கை இராணுவத்தின் போர் வரலாற்றில் ‘பரம வீர விபூஷணய’ விருதை முதன்முதலாகப் பெற்றவர், இது சிப்பாயின் அதிஉயர் தியாகத்தைப் பாராட்டி மரணத்திற்குப் பின் வழங்கப்படும் உயரிய வீரப் பதக்கமாககும்.
இலங்கை பொறியியலாளர்களின் நிபுணத்துவத்தின் கீழ் தொண்டர் படையணியின் கூட்டு முயற்சியாக கெப்டன் சாலிய அலதெனியவின் நினைவு தூபி நிறுவப்பட்டது.
அனைத்து மதத்தினரின் மத அனுஷ்டானங்கள் ஊடாக வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களுக்கும் மறைந்த கெப்டன் சாலிய அலதெனியவிற்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
தாய்நாட்டிற்கும் அமைப்பிற்கும் மரியாதை செலுத்தும் வகையில், அனைவராலும் தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம் இசைக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் இலங்கை சிங்க படையணியின் படையினர் நினைவுத்தூபிக்கு உயிரிழந்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் உரையாற்றிய தளபதி, கொக்காவிலில் கொடூரமான எல்ரீரீஈ தாக்குதலில் உயிர் தியாகம் செய்த கொப்டன் சாலிய அலதெனிய மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்தவர்களின் அதிஉயர் தியாகத்தின் பின்னணியில் உள்ள கதையை எடுத்துரைத்தார். வீரமிக்க வீரனைப் பெற்றெடுத்த அன்பிற்குரிய தாயார் திருமதி இந்திராணி அலதெனிய மற்றும் ஷூம் மூலம் விழாவில் இணைந்த அப்போதைய கட்டளை அதிகாரி பிரிகேடியர் அபய வீரகோன் (ஓய்வு) கே.எஸ்.வி.க்கு தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார்.