31st January 2025 10:46:16 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், வடமேற்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 ஜனவரி 28 ஆம் திகதி குருநாகல் புகையிரத நிலையத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். “தூய இலங்கை” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
30 படையினர் மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்கள், இந்த முயற்சியில் பங்கேற்று, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பேணுவதற்கு பங்களித்தனர்.