Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2021 19:45:47 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் புதிய படைத் தளபதிக்கு பாராட்டு

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் புதிய படைத் தளபதியாக நியமனத்தை பெற்றுக்கொண்டதையடுத்து குருணாகலில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (25) அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

புதிய படைத் தளபதியை பிரதான நுழைவாயிலில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்டீஎஸ்கே குணவர்தன, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து வரவேற்பளித்ததை தொடர்ந்து இராணுவ மரபுகளுக்கமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியின் இலங்கை தேசிய பாதுகாவலர் படைத் தலைமையகத்திற்கான முதல் விஜயத்தின் அடையாளமாக மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதோடு படையினருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட தளபதி வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதியவர்கள் இலங்கை தேசிய பாதுகவலர் படையணியின் தலைமையகத்தில் நிறுவப்பட்டிருக்கும் புதிய சூரிய சக்தி மின் கட்டமைப்பு மற்றும் சேதன பசளை உற்பத்திக்கான கட்டமைப்புக்கள் என்பவற்றை மேற்பார்வை செய்ததை தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.