Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2021 13:48:33 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் புதிய தளபதி அலுவலக கடமைகளை பொறுப்பேற்றார்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே குருணாகல் வெஹெரஹரவில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 20 வது படைத் தளபதியாக செவ்வாய்க்கிழமை (13) அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தளபதி படையணித் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்தபோது, அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், நிலையத் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எம்.டி.எஸ்.கே குணவர்தன அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து தளபதி போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இடம்பெற்ற மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கைசாத்திட்டார்.

பின்னர், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது புதிய அலுவலக வளாகத்தில் பதவியேற்பின் நினைவம்சமாக மரக்கன்று ஒன்றினை நாட்டி வைத்ததுடன் பாதுகாவலர்களுக்கான தங்குமிட கட்டிடத்தொகுதியில் படையினருக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

கொவிட் – 19 தடுப்புக்காக இராணுவ தலைமையகத்தின் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய நிலையத் தளபதி, படையணி பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையணி பணியாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.