07th March 2023 19:36:45 Hours
'மா ஓயா' ஆற்றின் ஓரத்தில் அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் தற்போதுள்ள விடுமுறை விடுதிக்கு மேலும் ஒரு கவர்ச்சியை சேர்க்கும் வகையில், இலங்கை சிங்கப் படையணி பார்வையாளர்களின் கண்ணைக் கவரும் வகையில் நட்பு விடுமுறை விடுதி 'ரெவெரின் கபானா' வை அமைத்துள்ளது.
இலங்கை சிங்க படையணியின் நிலைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமலை அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் உபகரண பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் சனிக்கிழமை (மார்ச் 4) புதிய விடுமுறை விடுதியை திறந்து வைத்தார். இலங்கை சிங்க படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் வஜிர அமரசிறி அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது.
அன்றைய பிரதம அதிதி நாடாவை வெட்டி, பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து புதிய விடுமிறை விடுதியை திறந்து வைத்தார். இந்த வசதியை முழுமையாகப் பார்வையிட்ட பின்னர், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி, புதிய விடுமுறை விடுதியை நிறைவு செய்வதற்கு உறுதியளித்த படையினரையும், முகாம் வளாகத்திற்குள் விவசாயத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களையும் பாராட்டினார்.