17th October 2023 22:27:06 Hours
அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தின் படையினரால் 33 ஆண்டுகளுக்கும் மேலாக மதிப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றுசெல்லும் பிரிகேடியர் ஆர்.டபிள்யூ.கே ஹேவகே அவர்களுக்கு சம்பிரதாய முறைகளுக்கமைய திங்கட்கிழமை 16 ஒக்டோபர் 2023) பிரியாவிடை வழங்கப்பட்டது.
அதன்படி, இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் சம்பிரதாயத்திற்கு அமைவாக, ஓய்வுபெற்ற பிரிகேடியர் அவர்களுக்கு நுழைவாயிலில் இலங்கை சிங்க படையணி படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து படைவீரர் விவகார பொதுப் பணி அதிகாரி 1 லெப்டினன் கேணல் பி.டபிள்யூ.ஆர்.டபிள்யூ.எம்.ஜே.ஆர்.டி.டபிள்யூ. பல்லேகும்புர அவர்களால் வரவேற்கப்பட்டார். நுழைவாயிலில் பிரதம அதிதியை இலங்கை சிங்கப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சி.எஸ்.திப்பொட்டுகே வரவேற்றதுடன் திருமதி ஆஷிகா திப்பொட்டுகே அவர்களால் திருமதி வத்சலா தீபனி குணரத்ன வரவேற்கப்பட்டார்.
பின்னர், ஓய்வுபெறும் பிரிகேடியருக்கு சம்பிரதாய அணிவகுப்பில் மரியாதை செலுத்தப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்குபற்றினர். அதனைத் தொடர்ந்து, இலங்கை சிங்க படையணி போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டார். பின்னர், அனைவருடன் மதிய உணவில் கலந்து கொள்வதற்கு முன் குழு படம் எடுத்துகொண்டார்.
இந்த நிகழ்வில், ஓய்வு பெறும் பிரிகேடியர் ஆர்.டபிள்யூ.கே. ஹேவகே ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ அவர் ஆற்றிய சேவையின் அடையாளமாக, வழங்கல் பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்க படையிணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பி ஜயவர்தன ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ ஆர்.எஸ்.பீ என்டியூ அவர்களால் சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, அனைத்து அதிகாரிகளிடமும் கலந்துரையாடிய அவர் 'சிங்க' குடும்பத்தின் உறுப்பினராக தனது கடமைகளைச் செய்ய அனைவரும் அளித்த உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை சிங்க படையிணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தனவினால் திருமதி வத்சலா தீபனி குணரத்னவிற்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையணியின் பேரவை உறுப்பினர்கள், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் பாடநெறி சகாக்கள், இலங்கை சிங்க படையிணியின் சிரேஷ்ட அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.