Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2023 21:28:06 Hours

இலங்கை சிங்கப் படையணி விளையாட்டு வீரர்களுக்கு ‘விளையாட்டு உளவியல்’ செயலமர்வு

விளையாட்டு பணிப்பகம், விளையாட்டு அறிவியலில் தொடங்கப்பட்ட கல்வித் திட்டங்கள் மற்றும் அமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் செயல்திறன் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த செயலமர்வினை ஏற்பாடு செய்தது.

விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டத்தில் இராணுவ விளையாட்டு உளவியலாளர் கெப்டன் ஓடிஎஸ்கே ரூபசிறி அவர்கள், இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) விளையாட்டு உளவியல் குறித்த செயலமர்வை நடாத்தினார்.

அதன்படி, 350 இற்கும் மேற்பட்ட இலங்கை சிங்கப் படையணியின் விளையாட்டு வீரர்கள் மற்றும் இலங்கை இராணுவ வுஷூ வீரர்கள் செயலமர்வில் பங்குபற்றினர்.

இலங்கை சிங்கப் படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் யுவிடபிள்யூஎஸ் அமரசிறி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் செயலமர்வில் பங்குபற்றினர்.