Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2022 11:21:08 Hours

இலங்கை சமிஞ்சை படையணிக்கு 79 வருடம் பூர்த்தி

இராணுவ தகவல் தொடர்பு மற்றும் கணினி அமைப்புகளை 24 மணி நேரமும் வேகம் மற்றும் நம்பிக்கை எனும் தொனிப்பொருளுடன் தவறாமல் இயக்கி பாதுகாக்கும் தொடர்பாடல் மற்றும் வலையமைப்பு நிபுணர்களை கொண்ட இலங்கை சமிஞ்சை படையணி தனது 79 வது ஆண்டு விழாவை புதன்கிழமை (19) பனாகொட இலங்கை இலங்கை சமிஞ்சை படையணி தலைமையகத்தில் பிரமாண்டமாக கொண்டாடியது.

இலங்கை சமிஞ்சை படையணி படைத் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா அவர்கள் பிரதான நுழைவாயிலுக்கு வருகை தந்ததை தொடர்ந்து இலங்கை சமிஞ்சை படையணி நிலையத் தளபதியும் இலங்கை இராணுவத்தின் பிரதான சமிஞ்சை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் அவர்களுக்கு மரியாதை செலுத்தி அன்றைய பிரதம அதிதியை வரவேற்றனர்.

வருகை தந்த படைத் தளபதிக்கு அணிவகுப்பு சதுக்கத்தில், இலங்கை சமிஞ்சை படையணியின் படையினர்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பிறகு படைத் தளபதி, அணிவகுப்புத் தளபதியுடன் இலங்கை சமிஞ்சை படையணியின் 79 வது ஆண்டு விழாவின் இராணுவ அணிவகுப்பு மரியாதையை மதிப்பாய்வு செய்தார். இந்த அணிவகுப்புக்கு 10 வது இலங்கை சமிஞ்சை படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்எம்பீஎம்பீ ஹேரத் அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆண்டு விழாவின் போது முந்தைய ஆண்டில் இலங்கை சமிஞ்சை படையணியின் படையினர்களின் விளையாட்டு சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கிண்ணங்களை வழங்குவதன் மூலம் அவர்களினால் படையணியின் வளர்ச்சிக்கான பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்து. தொடர்ந்து சகல படையினருடனான மதிய உணவு தொடர்ந்து 11 படையலகுகளிடையே சிறந்த படையலகினை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் கைதட்டல்களுக்கு மத்தியில் 10 வது இலங்கை சமிஞ்சை வெற்றி கிண்ணத்தினை தட்டிச் சென்றது. இலங்கை சமிஞ்சை படையணியின் அனைத்து படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளில் பங்குபற்றினர். தொடர்ந்து மாலைவேளையில் புதிதாக நிறுவப்பட்ட இலங்கை சமிஞ்சை படையணி அதிகாரிகளின் உணவறையில் 200 அதிகாரிகள் பங்குபற்றிய இராணுவ முறைமைக்கு அமைவான இராபோசண விருந்துபசாரம் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் போர் ஆதரவுப் படையான இலங்கை சமிஞ்சை படையணி இராணுவத் தொடர்புகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு போர் ஆதரவுகளை வழங்குவதனை முக்கிய பொறுப்பாக கொண்டுள்ளது. இப்படையணி பத்து நிரந்தர படையலகுகள் மற்றும் ஒரு தொண்டர் படையலகினையும் கொண்டுள்ளது. இராணுவத்தின் அனைத்து வகையான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் தகவல் அமைப்புகளை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பன இதன் கடமைகளாகும்.