Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2023 19:15:35 Hours

இலங்கை சமிக்ஞை படையணியின் தடகள போட்டி அனுராதபுரத்தில் நிறைவு

அனுராதபுரம் 4 வது இலங்கை சமிக்ஞை படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை சமிக்ஞை படையலகுகளுக்கு இடையிலான தடகள போட்டி – 2023, 11 இலங்கை சமிக்ஞை படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 90 விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் அனுராதபுரம் பொது மைதானத்தில் ஜூலை 18 மற்றும் 19 திகதிகளில் இடம்பெற்றது.

இப் போட்டியில் விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியதுடன் 4 வது இலங்கை சமிக்ஞை படையணி 210 புள்ளிகளைப் பெற்று சம்பியன்ஷிப்பைப் தனதாக்கி கொண்டது.

இந் நிகழ்வில் 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்ஜீ பண்டாரநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் 4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்டிஆர்எம் பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு:

சாம்பியன் (210 புள்ளிகள்) - 4 வது இசப

இரண்டாம் இடம் (105 புள்ளிகள்) - 1 வது இசப

மூன்றாம் இடம் (91 புள்ளிகள்) - 7 வது இசப

சிறந்த தடகள வீரர் (ஆண்கள்) – 4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டிஎச்சி சந்திரசேன

சிறந்த தடகள வீராங்கனை - 6 வது இலங்கை சமிக்ஞை படையணியின் பெண் சிப்பாய் டிஜே ஹேமன்