Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 14:30:16 Hours

இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி கடமைகளை ஆரம்பிக்கிறார்

குக்குலேகங்காவில் அமைந்துள்ள இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் சிந்தக ராஜபக்ஷ புதன்கிழமை (27) அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த போது நுழைவு வளாகத்தில் சிப்பாயிகளினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் பின்னர் இலங்கை சமாதான ஒத்துழைப்புற்கான பயிற்சி நிலையத்தின் வளாகத்தில் மாமரக்கன்று ஒன்றை நடுவதற்காக தளபதி அழைக்கப்பட்டார்.

நிகழ்வின் நிறைவம்சமாக தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தளபதி சிப்பாய்களுக்கான உரையொன்றையும் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் தலைமை பயிற்றுவிப்பாளர் உட்பட, பணிநிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் சிந்தக ராஜபக்ஷ இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தின் 14 வது தளபதி ஆவார். இவர் இந் நிலையத்தின் நியமனம் பெறுவதற்கு முன்னர் முல்லைத்தீவில் 592 வது பிரிகேட் தளபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. .