21st October 2023 07:18:18 Hours
வியாழன் (ஒக்டோபர் 19) அன்று புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யுஎஸ்ஏடப்ளியுசி பீஎஸ்சி அவர்களுக்கு இராணுவ மரியாதை மற்றும் அன்பான வாழ்த்துக்களை ரொக் ஹவுஸ் இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
முதலில் படையணி தலைமையக படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற படையினருக்கான உரையின் போது மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யுஎஸ்ஏடப்ளியு பீஎஸ்சி அவர்கள் இரண்டு நட்சத்திர ஜெனரலாக நிலை உயர்வுக்கு வழிவகுத்ததற்காக ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையணியின் சிப்பாய்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். "இது ஒரு தொழில், அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியின் பல தருணங்கள் நிறைந்தது" என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் அனைத்து நிலையினருடான தேநீருடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தது.