26th October 2021 20:10:40 Hours
இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலைமையகம் நிறுப்பட்டதிலிருந்து 32 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு பல நிகழ்வுகள் திங்கட்கிழமை (23) பனாகொடவில் ஆரம்பமாகின.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்ட யாழ். பாதுகாப்பு படையணி தலைமையக தளபதியும் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு இலேசாயுத காலாட் படையணியின் சிப்பயாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் டி.சி.கே பீரிஸ் அவர்களினால் படைத் தளபதிக்கு வாழ்த்துக்களுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒர் அங்கமாக 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இலேசாயுத காலாட் படையணி உறுப்பினர்களின் குடும்பங்களின் பதினைந்து பிள்ளைகளுக்கு ஐந்து மடிக்கணினிகள் மற்றும் பத்து டெப் கணினிகளும் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை தொடர்ந்து படையணி வளாகத்திற்குள் புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவொன்றும் திறந்துவைக்கப்பட்டது. அதனையடுத்து ஆண்டு நிறைவு தின பிரகடனம் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களால் முன்மொழியப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2021 இல் நடைபெற்ற நிர்வாகத்துறை பரீட்சைகளில் 1 வது மற்றும் 2 வது இடங்கள் பெற்று சாதனை படைத்தவர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் நிரந்தர படையில் முதலாமிடத்தை 11 வது படையும் இரண்டாம் இடத்தை 7 வது படையும் பெற்றுக்கொண்டதோடு தொண்டர் படைகளில் முதலாம் இடத்தை 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையும் இரண்டாமிடத்தை 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையும் பெற்றுக்கொண்டன.
மேலும் அன்றை தினம் மாலை வேளையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வேலியுடன் கூடிய புத்தர் சந்நிதியும் தளபதியவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் படைத் தளபதியவர்களால் காலோசிதமானதும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலானதுமான உரையொன்று நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து நிலைகளுக்குமான மதிய விருந்துபசாரம் இடம்பெற்றது.
அதேபோல் 32 வது ஆண்டு நிறைவு தினத்தையிட்டு மகா சங்கத்தினரின் பிரித் பாராயண நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தவுடன், ஹீல் தானம் (காலை உணவு) வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேற்படி படையணியின் ஆண்டு பூர்த்தி நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.
இலங்கை காலாட்படை படைப்பிரிவின் தலைமையகம் 1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு அதன் 1 வது பிரிகேட்டும் முதலாவது படையணியும் பனாகொட இராணுவ முகாமில் நிறுத்தப்பட்ட பின்னர் அதற்கான தனிக்கொடியும் நிறுவப்பட்டது.