Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2021 21:59:00 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது சிப்பாய்களுக்கு மேலும் 20 வீடுகள் நிர்மாணிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் வழிகாட்டல்களுக்கமைவாக இலங்கை இலேசாயுத காலாட்படையின் கீழ் பணியாற்றும் சகலருக்குமான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் நலன்புரித் திட்டத்தின் 2 வது அத்தியாயத்தின் கீழ் 20 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராணுவத்திலுள்ள அனைத்து சிப்பாய்களுக்கும் சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைய செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட 20 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் பகுதியளவில் நிறைவுச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றம் படையினர் விவகார பணிப்பகம் மற்றும் தனியார் துறை நன்கொடையாளர்களின் உதவியுடன் இத்திட்டத்தின் 2 வது கட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச திட்டத்தின் அத்தியாயம் இரண்டின் கீழ் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் 1.4 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, இத்திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கான மனித வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவிகளை வழங்க இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்கள் முன்வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும். அண்மையில் இடம்பெற்ற இலங்கை இலேசாயுத காலாட் படையின் பேரவைக் கூட்டத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு அவர்களால் மேற்படி திட்டத்தை நனவாக்கிகொள்ள முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.