01st January 2020 21:20:29 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வருடாந்த ‘பாபலா மெலா’ சாகச கண்காட்சியானது 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27-28ஆம் திகதிகளில் ஹிக்கடுவை பொது மைதானத்தில் பெரும் திரலான மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது 1 சிவில் ஊளியர் உட்பட யுத்தத்தில் காயமுற்ற 7 இற்கும் அதிகமான படை வீரர்களுக்கு பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிதி திரட்டும் ‘பாபலா மெலா’ கண்காட்சி மற்றும் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வானது தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் மற்றும் முன்னாள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவான் கலுதுங்க அவர்களினால் 27ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதி நாள் 28ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் இணைந்து கொண்டார். அதே நிகழ்வில் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் ரூபா. 5 மில்லியன் பெறுமதியான காசேலையினை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி கிறிஷானி முதலிகே அவர்களிடம் சேவா வணிதா நலன்புரி செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான மற்றும் 1 சிவில் ஊளியர் உட்பட யுத்தத்தில் காயமுற்ற 7 இற்கும் அதிகமான படை வீரர்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதியுதவிகள் அளிக்கப்பட்டன.
இரண்டு நாட்களும் இடம்பெற்ற பலவகையான கண்காட்சி கடைகள், கொமாண்டோ படையணியின் நாய் சாகசம் ,இலங்கை மின்சார மற்றும் எந்திர பொறியியலாளர் படையணியின் வாகன சாகசங்கள். அங்கம்பொர தற்காப்புக் கலை,பேண்ட் வாத்தியங்கள் மற்றும் ஏனைய துணிகரமான சாகசங்கள் மூலம் மக்கள் அதிகமாக மகிழ்ந்தனர்.
அதேநேரம், பிரபல்யமான பேண்ட் குழாம், கலைஞர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்கள் சிறந்த பிரபல்யமான பாடகர்களைக் கொண்டு புதிய மற்றும் பழைய பாடல்களை வழங்கி மக்களை மகிழ்வித்தனர்.Best Sneakers | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival