Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2021 08:00:35 Hours

இலங்கை இலேசாயுத கலாட்படையின் “டுவென்டி நெஸ்ட்” விடுமுறை விடுதி முக்கொம்பனில் திறப்பு

20 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையின் (SLLI) புதிய விடுமுறை விடுதியான “டுவென்டி நெஸ்ட்” பூநகரி, முக்கொம்பனில் வெள்ளிக்கிழமை (17) 66 வது படைப்பிரிவின் தளபதியின் அழைப்பின் பேரில் இலங்கை இலேசாயுத கலாட் படையின் படைத் தளபதியும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் நினைவுப் பலகை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் மரக்கன்று நடுதல், குழு புகைப்படம் எடுத்தல் படையினருக்கு உரையாற்றல் என்பவற்றிலும் கலந்துக் கொண்டார்.

திறப்பு விழாவில் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, இலங்கை இலேசாயுத காலாட் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த பீரிஸ், 662 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த லியனகே, 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.

இந்த புதிய விடுமுறை விடுதியானது கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் I.K.A.C குமாரவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் படையலகின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது. அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், பிரதம அதிதியான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு நினைவு சின்னம் ஒன்றினை கட்டளை அதிகாரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.