Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2023 21:36:48 Hours

இலங்கை இலங்கை கவச வாகன படையணியின் படையலகுகளுக்கிடையிலான அணிநடை/ அணிநடை கோது போட்டியின் பரிசளிப்பு விழா - 2023

இலங்கை இலங்கை கவச படையணியின் படையலகுகளுக்கிடையிலான அணிநடை/ அணிநடை கோது போட்டி – 2023 பரிசளிப்பு விழா மார்ச் 31 அன்று கலத்தேவ இலங்கை கவச வாகன படையணி பயிற்சி மையத்தில், இலங்கை கவச படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பியல் விஜேசிறிவர்தன தலைமையில் நடைபெற்றது.

போட்டிகள் 2023 மார்ச் 30 மற்றும் 31 அன்று கலத்தேவ இலங்கை கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

படையலகுகளுக்கிடையிலான அணிநடை போட்டி 2023 ல் சிறந்த செயல்திறன்களைக் காட்டிய 4 வது இலங்கை கவச வாகன படையணியின் அணிநடை குழு சாம்பியன் பட்டத்தினை வென்றதுடன் 1 வது இலங்கை கவச வாகன படையணியின் அணிநடை குழு 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியின் அணிநடை குழுவினை எதிர்கொண்டு இப் போட்டியில் இரண்டமிடத்தினை பெற்றுக்கொண்டது.

அதேபோல் அணிநடை கோது போட்டி 2023ல் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியின் அணிநடை கோது போட்டி குழு சாம்பியன் பட்டத்தினை வென்றதுடன் 6 வது இலங்கை கவச படையணி மற்றும் 5 வது இலங்கை கவச வாகன படையணி முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்றது.

4 வது இலங்கை கவச படையணியின் கேப்டன் எச்எம்எச் சேனாரத்ன சிறந்த கட்டளையாளர் விருதையும் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியின் பணிநிலை சார்ஜென்ட் டிபி திஸாநாயக்க சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதையும் வென்றனர்.