Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2022 06:25:22 Hours

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 5 வது வருடாந்த அமர்வுகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 5வது வருடாந்த கல்வி அமர்வுகளுக்கான சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்வு ஈகிள்ஸ் லேக்சைட் ஹோட்டலில் வியாழக்கிழமை (9) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில், விஷேட வைத்திய நிபுணர்கள், தொழில் வான்மையாளர்கள் மற்றும் இராணுவ மருத்துவ நிபுணர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை இராணுவ மருத்து கல்லூரியின் பேராசிரியர் சரோஜ் ஜயசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி ஆலோசகர் திரு லலித் வீரதுங்க கலந்துகொண்டிருந்தார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சய முனசிங்க, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளின் பதவிநிலை பிரதானிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவ மருத்து கல்லூரியின் தலைவர் பிரிகேடியர் (வைத்தியர்) கிறிஷாந்த பெர்னாண்டோ நிகழ்வில் ஆரம்ப உரையை நிகழ்த்தியிருந்ததோடு, மூன்றுநாள் அமர்வில் கலந்தாலோசிக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தினார். அதேநேரம் 2016 இராணுவ மருத்துவ கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியானது தேசிய சுகாதார கொள்கையை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான ஆராச்சிகள், கண்காணிப்புச் செயற்பாடுகள், தொழில்சார் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் கண்டுப்பிடிப்பு முயற்சிகள் ஆகியவற்றை இராணுவ மருத்துவத்துறைக்குள் வலுவூட்டுவதற்காக நிறுவப்பட்டது. அத்தோடு வளங்கள் முகாமைத்துவம், தீர்மானம் எடுக்கும் தன்மை, சஞ்சிகை வெளியீடு என்பவற்றோடு நீர் மற்றும் வான் மருத்துவ செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் முப்படையினருக்கு அவசியமான மருத்துவ தெரிவுகள் வழங்கப்படுகிறது. அதேநேரம் இராணுவ மருத்து செயற்பாடுகளின் முக்கிய அம்சங்களாக கருத்தப்படும் தொற்றா நோய்கள் குறித்த அமர்வுகள் விளக்க காட்சிகள் மற்றும் விளக்க வரைபடங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டன.

இந்த அமர்வுகளின் போது சுழியோடல் மற்றும் ஹைபர்போலிக் மருத்துவம் விமான மருத்துவம் மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுக்கரு (CBRN), பாம்பு கடி, நரம்பு காயங்கள், குடல் சார் நோய்கள் பற்றிய பொதுவான விளக்கங்களும் இதன்போது வழங்கப்படுமென எதிர்பார்க்கபடுகிறது. அதேநேரம், இந்நிகழ்வில் பங்குபற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்களின் பொதுவான நோய்கள், வைரஸ் பரவல், மருத்துவ துறைசார் அச்சுறுத்தல்கள், துறைசார் புத்தாக்கங்கள், நோயியல் அம்சங்கள் மற்றும் குணப்படுத்தும் அம்சங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தெரிவுகளை பகிர்ந்துகொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவத் துறைகளுடன் தொடர்புடைய ஏனைய கல்லூரிகளிலிருந்து பெறப்பட்ட 250 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மேற்படி அமர்வுகளில் பங்கேற்பதோடு, 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச இராணுவ மருத்துவ சபையில் (ICMM) இலங்கை அடைந்துள்ள மைல்கல் இலக்காகும். இதனால் இலங்கை இராணுவ மருத்து கல்லூரி எதிர்பார்க்கும் இலக்கும் எட்டப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வுகளின் போது, ஏற்பாட்டாளர்கள் பயனுள்ள கலந்துரையாடல்களை தொடரவும், நிபுணத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளில் பங்காளிப் மேம்படுத்தவும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிகழ்வில் திரு லலித் வீரதுங்க அவர்கள் ஆற்றிய உரையில், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தடுப்பூசி வழங்கல் செயற்பாட்டில் இலங்கையின் முப்படையினர் ஆற்றிய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த முயற்சிகள் சிவில் – இராணுவ ஒத்துழைப்புச் திட்டமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பின்தங்கியதாக காணப்படும் கஸ்ட பிரதேசங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து பேராசிரியை சரோஜ் ஜயசிங்க ஆற்றிய உரையின் போது தொற்றுநோய் பாதிப்புக்களை எதிர்கொள்ள ஒன்றுபட்டு செயற்பட்ட விதம் உலகிற்கே முன்மாதிரியானதாக அமைந்திருந்ததென சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் மேஜர் (டாக்டர்) ஆர்.ஏ.ஏ.டபிள்யூ.விஜேசிங்க அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி என்பது இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் மருத்துவ மற்றும் பல் மருத்துவர்களைக் கொண்ட ஒரு தொழில்முறை அமைப்பாகும். இது சுமார் 400 மருத்துவர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிபுணத்துவ அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. இராணுவ ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் இலங்கை இராணுவ மருத்து கல்லூரியின் நிர்வாகச் செயற்பாடுகளில் அங்கத்துவம் வகிக்கின்றமை அதன் தனித்துவமான சிறப்பாகும். 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியானது. இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை ஆகியவற்றின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட சகோதர மருத்துவ சேவைகளுடன் இணைந்து செயற்படுவதோடு மருத்துவ கல்வித் துறையிலும் மேம்பாட்டினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.