Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2024 15:17:14 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத் தளபதி களுஅக்கல விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 17 டிசம்பர் 2024 அன்று களுஅக்கல பிரிவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

களுஅக்கல பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் எஸ்இ கபுகமகே அவர்கள் வருகை தந்த படைத் தளபதியை வரவேற்றதுடன், பிரிவின் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பான விளக்கத்தையும் வழங்கினார்.

கூடுதலாக, அவர் சிறப்பு நடவடிக்கை ஆதரவு குழுவின் படையினர் மற்றும் பனாகொட முகாமில், நிலைநிறுத்த ப்பட்டுள்ள படையினருக்கு உரையாற்றினார். அவரது உரையின் போது, அவர் படையினருக்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டினார், பயிற்சி, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார், மேலும் பிரிவை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து அம்சங்களிலும் உயர் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.