Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2021 23:00:24 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தின் புதிய 5 மாடி கட்டிடம் திறப்பு

பொரள்ளையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி (SLAWC) தலைமையகத்தில் அதி நவீன வசதிகளுடனான புதிய 5 மாடி அலுவலக கட்டிடம் இன்று (23) காலை பாதுகாப்புத் பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றது. அதன்போது இராணுவ முறைப்படி வர்ணமயமான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவ மகளிர் படையணி தலைமையக நுழைவாயிலில் பிரதம அதிதிக்கு வழங்கப்பட்ட பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதினை தொடர்ந்து இராணுவ மகளிர் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சாமிந்த திப்பொட்டுகே அவர்கள் வரவேற்றார். பின்னர் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவிநிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களால் அன்றைய பிரதம அதிதி வரவேற்கப்பட்டார்.

இந் நிகழ்ச்சியில் மகா சங்கத்தின் உறுப்பினர்களின் பிரீத் பாராயணங்களுக்கு மத்தியில் நினைவுப் பலகை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி புதிய அலுவலக வளாகம் திறந்து வைக்கப்பட்டது. அதிகாரிகளின் தொழில்வாண்மை திட்டமிடல் பிரிவு , களஞ்சியம், அலுவலகங்கள் மற்றும் தொண்டர் ஒருங்கிணைப்பு அலுவலகம் போன்றவை உட்பட அனைத்து நிர்வாக நடவடிக்கைகளை ஒரே கூரையின் கீழ் செயற்படுத்துவதற்கான வகையில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி SLAWC சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி பத்மா பெரேரா ஆகியோர் புதிய மாடி கட்டிட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதுடன் நினைவகமாக புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் இராணுவத் பதவிநிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இலங்கை இராணுவ மகளிர் படையின் நன்றிக்கும் பாராட்டுக்கும் அடையாளமாக அன்றைய பிரதம விருந்தினருக்கு சிறப்பு நினைவு பரிசினை வழங்கி வைத்தார். அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவ மகளிர் படையணி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாபா, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ வனிகசேகர, சிரேஸ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தின் நிதியளிப்பில் 6 வது (தொ) பொறியியலாளர் சேவைப் படையணியினரால் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, முன்னாள் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜனக ரத்நாயக்க, தற்போதைய நிலையத் தளபதி பிரிகேடியர் சாமிந்த திபொட்டுகே, ஆகியோரின் அயராத முயற்சியால் குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி சில மாதங்களுக்கு முன்பு அங்கு விஜயம் செய்து போது, இந்த வளாகத்தின் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தை நிர்மானிக்க முன்வந்தார்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 1979 செப்டம்பர் மாதம் 01 திகதி அப்போதைய இராணுவ தளபதி ஜெனரல் ஜே.இ.டி. பெரேராவின் 'சவி பல சித் - அவி பல தேத்' (பலமான மனதோடும் ஆயுத கரத்தோடும்) என்ற நோக்க கூற்றுடன் ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டு நிலையான மற்றும் ஐந்து தொண்டர் படையலகுகளை கொண்டுள்ளது. தொலைபேசி இயக்குனர்கள், கணினி இயக்குனர்கள், தாதியர்கள் மற்றும் எழுதுவினைஞர்கள் போன்ற சேவைகளை வழங்குவது இதன் முதன்மை நோக்கமாகும். இருப்பினும், பெண் வீரர்கள் பின்னர் ஆண் வீரர்களை விடுவிப்பதற்காகவும் போர்க்கள பணிகளுக்காகவும் பணியமர்த்தப்பட்டனர்.