04th October 2023 21:41:46 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவு மற்றும் படையணி தலைமையகத்துடன் இணைந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு களுத்துறை நஹின்ன சிறுவர் பாடசாலையில் திங்கட்கிழமை (ஒக்டோபர் 2) 154 மாணவர்களுக்கான விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், அவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு பல மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.