Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவ மகளிர் படகோட்ட குழுவினரால் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் சுவிகரிப்பு

2019 கிங்ஸ் கப் போட் ரேஸ் ரிவ விழாவுடன் இணைந்து ஆசிய படகோட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் தாய்லாந்து மாஸ்ட்ர்ஸ் ரெகெட்ட பட்டயவில் 18-22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற ஆசிய படகோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பதகங்களை சுவிகரித்து கொண்ட இலங்கை இராணுவ மகளிர் படகோட்ட குழுவினர் செவ்வாய் கிழமை 24ஆம் திகதி காலை இலங்கையை வந்தடைந்தனர்.

இந்த அணியை வரவேற்க இராணுவ படகோட்ட சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் நிஷாந்த வடுகொடபிட்டிய மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டன.

இப் போட்டிகளில் இராணுவ பெண் போட்டியாளர்களும் பங்களிப்பு செய்தனர், இதன்போது LW4X - Light Women’s Quadruple Scull சாம்பியன்ஷிப்பின் போட்டி நிகழ்வு பிரிவின் கீழ் ஆசிய படகோட்ட சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ மகளிர் படகோட்ட குழுவினர், முதல் வெள்ளி பதக்கத்தை வென்றனர்.

இதேபோல், மகளிர் Open Light Weight Quadruple Scull நிகழ்வில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் போட்டியிட்டன.

இப் போட்டியில் இராணுவ புலனாய்வுப் படையணியின் கெப்டன் மகேஷி லியனகே (மூன்று), இலங்கை குழுவினர், (Stroke) இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் தரிகா வீரசிங்க, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் காஞ்சனா வீரகோண் (two) மற்றும் கோப்ரல் அனுராத சூரசேன (bow) ஆகியோர் போட்டியின் போது தங்களது திறமையை வெளிகாட்டினர். Running Sneakers Store | Nike, adidas, Converse & More