05th November 2021 06:02:56 Hours
ரெஜிமெண்டல் குவார்ட்டர் மாஸ்டர் பாடநெறி எண் - 67 மற்றும் களஞ்சிய பொறுப்பாளர்கள் பாடநெறி எண் - 49 ஆகியவை 29 அக்டோபர் 2021 அன்று தொம்பகொட இலங்கை இராணுவ போர்க் கருவிகள் படையணி பாடசாலையில் முடிவடைந்தது.
இதன் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாககலந்து கொண்ட இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க அவர்களை இராணுவ போர்க்கருவி படையணி தளபதி லெப்டிணல் கேணல் தரங்க சில்வா அவர்களினால் வரவேற்கப்பட்டார்.
பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 45 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் 30 இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் இதர நிலை சிப்பாய்கள் பிரதம அதிதியிடம் இருந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
2 வது இராணுவ போர்க்கருவி படையணின் பணிநிலை சார்ஜென்ட் ஜே.ஏ.கே.பிரியதர்ஷன, ரெஜிமென்ட் காலாண்டு மாஸ்டர் பாடநெறி எண் - 67 இன் சிறந்த மாணவராகவும், முதலாவது உளவுப் படைப்பிரிவின் இலங்கை கவசப் படையின் கோப்ரல் ஜிஐஆர்ககே கமகே, களஞ்சிய பொறுப்பாளர் பாடநெறியின் சிறந்த மாணவராக விருது பெற்றனர்.
பதவிநிலை அதிகாரி 1 (LOG), இராணுவ போர்க்கருவி படையணி பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், அதிகாரிகள் மற்றும் சிப்பாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.