Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2021 15:45:33 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவின் தளபதி மரியாதை நிமித்தமான விஜயம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் வழங்கல் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அண்மையில் கல்குளம் பகுதியிலுள்ள 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, காங்கேசன்துறையிலுள்ள 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, கிளிநொச்சியிலுள் 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, முல்லைத்தீவிலுள் 6 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி ஆகியவற்றுக்கு தனது ஓய்வுக்கு முன்பாக மரியாதை நிமித்தமான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது படைத் தளபதிக்கு படையணிகளின் கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்பளிக்கப்பட்டதோடு, சம்பிரதாய நிகழ்வுகளின் பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட பின்னர் படையினருக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

தனது உரையின் போது தளபதி இராணுவத்தின் ஒழுக்கத்தை கட்டிக்காப்பதில் இராணுவ பொலிஸ் படையணியினரின் அர்ப்பணிப்பு மிக்க கடமைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துடன், 4வது இலங்கை பொலிஸ் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்ஆர்பி பெரேரா, 3 வது இலங்கை பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஎம்டிஜிபிஏ வீரகோண், 5வது இலங்கை பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீடிஐ பெரேரா, 6 வது இலங்கை பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜேஎஸ் ஜயதிளக்க யூஎஸ்பி, மேற்படி படைப்பிரிவுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினரும் கலந்துகொண்டதுடன் சகலரும் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்தனர்.