Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2022 19:45:26 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையின் “ப்ரோவோஸ்ட்” பாடநெறி – 80 இனால் 309 ஆண் மற்றும் பெண் இராணுவ பொலிஸார் உருவாக்கம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையின் “ப்ரோவோஸ்ட்” பாடநெறி – 80 யின் விடுகை நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) கிரிதலே இராணுவ பொலிஸ் பாடசாலையில் இடம்பெற்றது. இந்த பயிற்சிகளில் 74 பெண்கள் உள்ளடங்களாக 309 இராணுவ பொலிஸார் பங்குபற்றியதோடு அவர்களுக்கான சிவப்பு நிற தொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கிரித்தலை இராணுவப் பொலிஸ் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் சீவலி ராஜநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்புப் பகுதியின் தளபதி யும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பிரதம விருந்தினரிடமிருந்து விருதுகளைப் பெற்றவர்களின் விவரம் வருமாறு:

இதன்போது சிறந்த குழு செயற்பாட்டாளராக (Platoon) பணிநிலை சார்ஜண்ட் பிஜிஎம்பி விஜேசூரிய சிறந்த குழு சார்ஜனாக ஆஎம்என்எம் ரத்நாயக்க அவர்களும் சிறந்த பிரிவு கட்டளையாளராகவும் கோப்ரல் ஏ.சி.என்.என்.லியங்கேயும் தெரிவு செய்யப்பட்டனர். அதேநேரம் ஆண் மற்றும் பெண் பொலிஸாருக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டன.

சிறந்த பயிற்சியாளர் - சிப்பாய் கேவீசீ ஜயரத்ன

சிறந்த துப்பாக்கிச் சுடுபவர் - சிப்பாய் டீஎம்ஏடி. ஞானதிளக்க

ஆரோக்கியம் மிக்கவர் - சிப்பாய் எச்எம்சீவீ ஹேரத்

ஆரோக்கியம் மிக்கவர் - சிப்பாய் எஸ்எம்ஐபீ ராஜசிங்க (இராணுவ பெண் பொலிஸ்)

ஆரோக்கியம் மிக்கவர் - சிப்பாய் ராஜசிங்க (இராணுவ பெண் பொலிஸ்) டீஎம்பீபீ செனானி.

சிறந்த துப்பாக்கிச் சுடுபவர் - சிப்பாய் (இராணுவ பெண் பொலிஸ்) கேகேஏசீ செவ்வந்தி

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ ஒழுக்கநெறிப்படுத்தல் பணிப்பாளர் பிரிகேடியர் லக்‌ஷ்மன் பமுனுசிங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.