29th April 2025 15:40:28 Hours
28 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பிரிகேடியர் ஜீவி எலபாத்த (ஓய்வு) வீஎஸ்வீ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை திங்கட்கிழமை (ஏப்ரல் 28) மாலை பாணந்துறை மினுவன்பிட்டிய பொது மயானத்தில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இறுதி இராணுவ மரியாதை செலுத்தினர். இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய படையினர் பூதவுடலை பெற்று, மயானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஆயுத மரியாதை வழங்கி, பின்னர் பேழையை தேசியக் கொடியால் போர்த்தி, துப்பாக்கி வண்டியில் வைத்தனர்.
இறுதி ஊர்வலம் மயானத்தின் நுழைவாயிலை அடைந்ததும் சிரேஷ்ட அதிகாரிகள் முறையாக பூதவுடலை பெற்றதுடன், குடும்ப உறுப்பினர்கள் பின்னால் பின்தொடர்ந்து தகன மேடையை நோக்கிச் சென்றனர்.
இந்நிகழ்வின் போது, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்பட்ட முறையான சிறப்பு கட்டளை I நிகழ்வில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர், காலஞ்சென்ற சிரேஷ்ட அதிகாரிக்கு படையினர் வணக்கம் செலுத்தி அடையாள துப்பாக்கி வணக்கத்தை செலுத்தினர், இது ஒர் இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.
சிரேஷ்ட வீரர் அவரது நித்திய ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் கடைசி வாசிப்பு எழுப்பப்பட்டதன் பின்னர் உடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களினால், பிரிகேடியர் ஜீவி எலபாத்த (ஓய்வு) வீஎஸ்வீ அவர்கள் தனது புகழ்பெற்ற வாழ்க்கையின் போது, ஆயுதப்படையில் பெற்ற புகழ்களுக்காக அவரது குடும்பத்திற்கு சின்னங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இறுதிச் சடங்கில் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரிகேடியர் ஜீவி எலபாத்த (ஓய்வு) வீஎஸ்வீ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு: