20th August 2023 20:23:43 Hours
சிந்தனைமிக்க மற்றும் செயலூக்கமான நடவடிக்கையாக, இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தலைமையகம் தனது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மன நலனை மேம்படுத்தும் வகையில், நட்புறவு மற்றும் பொழுதுபோக்கின் மறக்கமுடியாத நாளை ஓகஸ்ட் 10 அன்று பனாகொடவில் உள்ள இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணிவிளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தது.
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி படைத்தளபதி டிஎம்கேடிபீ புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையணி தலைமையகத்தினால் "போர் விங்ஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு துடிப்புடன் கூடிய ஒரு ஆற்றல்மிக்க இசை நிகழ்வு மாலையை நடத்தியது.
அதே நாள் காலை இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி பங்கேற்புடன் உற்சாகமான கிரிக்கெட் போட்டியும் நடாத்தப்பட்டது. இது இராணுவ சிப்பாய்கள் மற்றும் பெண் சிப்பாய்களின் மன உறுதிக்கு பங்களிக்கும் அதே வேளையில் நட்புரீதியான போட்டி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு ஒரு தளத்தை வழங்கியது.
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.