Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2021 10:09:20 Hours

இலங்கை இராணுவ பொது சேவைப் படைக்கு புதிய படைத் தளபதி

சம்பள மற்றும் பதிவு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பாலித ஹேவாவசம், இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் (SLAGSC) 14 வது படைத் தளபதியாக திங்கட்கிழமை (2) பனாகொடை படையணி தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

படையணி தலைமையத்திற்கு வந்த புதிய படைத் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை அடுத்து படையணி அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். அதன்பிறகு, படைத் தளபதி இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் இறந்த வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன் பிறகு, புதிய படைத் தளபதி பிரிகேடியர் பாலித ஹேவாவசம் பதவியேற்பின் அடையாளமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.

எளிமையான விழாவில் சிரேஸ்ட அதிகாரிகள், படையணி பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையணி ஊழியர்களுடன் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்வு இராணுவத் தலைமையகம் மற்றும் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டன.