Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2022 05:49:11 Hours

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி குட்டிகலையில் மர முந்திரிகை நடுகை

வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்காக, உள்ளூர் மட்டத்தில் ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிக்கும் அரசாங்க முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி குட்டிகலை முகாம் வளாகத்திற்குள் புதன்கிழமை (29) 700 மர முந்திரி மரக்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை இராணுவப் பொதுச் சேவை படையணியின் தளபதி பிரிகேடியர் பாலித ஹேவாவசம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆரம்ப கட்டம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 210 கன்றுகளை நடுவதன் மூலம் ஆரம்பமானதுடன் எஞ்சிய 7 ஏக்கரில் பரப்பில் இலங்கை முந்திரி கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் அடுத்த சில நாட்களுக்குள் நடுவதற்கு எதிர் பார்க்க படுகிறது.

முதலாவது இலங்கை இராணுவப் பொதுச் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ்.தேமுனி, குட்டிகலை முதலாவது இலங்கை இராணுவப் பொதுச் சேவை படையணியின் பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் கே.டி கோரகபிட்டிய ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்ற 210 கன்றுகள் நடும் இந்த நிகழ்வில் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.