03rd May 2025 11:00:52 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி விஜேசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் உறுப்பினர்களால் அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான மாதாந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முயற்சி, முதியோர் இல்லத்திற்கு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினர் வழங்கும் மாதாந்திர ஆதரவின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.