Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவ படகோட்டும் போட்டியில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் சாம்பியன்

இலங்கை இராணுவத்தின் 36 வது தேசிய படகோட்டும் போட்டி மார்ச் 12-13 திகதிகளில் தியாவண்ணா ஏரியில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் பங்கேற்ற 20 கழகங்களில் திறந்த ஆண்கள் பிரிவு, திறந்த மகளிர் பிரிவு மற்றும் பயிற்சி ஆண்கள் பிரிவு என்பவற்றில் இலங்கை இராணுவம் சாம்பியன்னாக மகுடம் சூடிக் கொண்டது.

கடற்படை, விமானப்படை, பொலிஸ், பல்கலைக்கழகங்கள், பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழகங்களின் அணிகள் போட்டிகளில் போட்டியிட்டன.

அதன்படி 3 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் இராணுவ ஆண் படகோட்டும் அணி பெற்றுக் கொண்டது. இராணுவ பெண் படகோட்டும் அணி 4 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். இதேபோல் இராணுவ பயிற்சி அணி ’3 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றது. Nike Sneakers | jordan Release Dates