Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2024 15:46:24 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி கட்டளை படையலகுகளுக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி, 4 வது (தொ) இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபிள் படையணி ஆகியவற்றிக்கு 2024 நவம்பர் 09 அன்று விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த ஒவ்வொரு இடத்திலும் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், அந்தந்த கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். விஜயத்தின் போது, தளபதி 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் மரக்கன்று நாட்டி குழு படம் எடுத்து முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன், படையினருக்கு உரையாற்றினார். விஜயத்தின் நிறைவாக தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை எழுதினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.