Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2025 19:05:03 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் இரண்டு நாள் பட்டறை

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி இரண்டு நாள் பயிற்சி திட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பட்டறையின் முதல் அமர்வு (07.04.2025) இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியின் வருகையுடன் ஆரம்பமாகியது. தொண்டர் படையணியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் ஆவணப்படத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நிர்வாகம் மற்றும் பயிற்சி அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அவசர மற்றும் சமகாலத்தில் வளர்ந்து வரும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் ஒரு பயனுள்ள ஒருங்கிணைப்பைத் தொடர, சட்ட விடயங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய சட்டமன்றக் கருத்தாய்வுகள் குறித்த விழிப்புணர்விற்கு இந்த அமர்வு உதவியது.

பட்டறையின் இரண்டாவது அமர்வில் (08.04.2025) பாடம் சார்ந்த உள்ளடக்கத்தைக் கையாளும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நாட்களில் நடைபெற்ற அமர்வுகளை பிரிகேடியர் நிர்வாகத்தின் பிரிகேடியர் பிஜே லேகம்கே ஆர்எஸ்பீ கேஎஸ்பீ, கேணல் சட்டப் பிரிவு கேணல் பிசீகே பெர்டினாண்டஸ் யூஎஸ்பீ மற்றும் தொண்டர் படையணியின் கேணல் பயிற்சி கேணல் டிஎஸ்பிஆர் பெர்னாண்டோ ஆகியோர் நடாத்தினர்.

பிரிகேடியர் எச்ஏ கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ ஒரு வள நபராக ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

சிந்தனையைத் தூண்டும் இறுதி உரையில், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, திட்டமிடப்பட்ட பட்டறையிலிருந்து பங்கேற்பாளர்களுக்கு எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் மற்றும் எதிர்கால வழிகளை உறுதிப்படுத்தினார்.

அர்ப்பணிப்பு, பங்கேற்பு மற்றும் சுறுசுறுப்பான ஈடுபாட்டை அங்கீகரிக்கும் விதமாக, பங்கேற்பாளர்களுக்கு இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி சான்றிதழ்களை வழங்கினார். இது ஒரு நுண்ணறிவு மற்றும் வளப்படுத்தும் பட்டறையின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது.

சான்றிதழ் வழங்கும் விழாவில் பதில் பிரதித் தளபதி, முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொண்டர் படையணியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பட்டறையின் வெற்றிக்காக பங்கேற்பாளர்கள், பொதுப் பணிநிலை பிரிவு, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக ஊழியர்களின் இருப்பு மற்றும் முயற்சியை இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி பாராட்டினார். கற்றல் மற்றும் சிறந்து விளங்கும் உணர்வை முன்னெடுத்துச் செல்வதற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.