10th May 2023 16:50:33 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினர்களுக்கான ‘திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க’ பயிற்சித் திட்டம் - 03 இற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 ஏப்ரல் 27 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாடநெறியில் கலந்து கொண்ட 21 சிப்பாய்களுக்கு சான்றிதல்களை வழங்கினார்.
இந்த பாடநெறி 19 டிசம்பர் 2022 முதல் 27 ஏப்ரல் 2023 வரை நடைபெற்றது. அங்கு அவர்களின் அறிவு, தேர்ச்சி, திறன், மற்றும் புத்தாக்கம் மேம்பாடுகளுக்கான பயிலரங்குகளும், கள விஜயங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதம பதவி நிலை அதிகாரி, பயிற்சி பரிசோதகர், கேணல் வழங்கல்கள், கேணல் இராணுவ செயலகம், கேணல் நிர்வாகம், ஆட்சேர்ப்பு அதிகாரி, கேணல் நலன்புரி, கேணல் கணக்காய்வு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.