Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2020 22:55:17 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி படையினருக்கு உரை

இலங்கை இராணுவ தொண்டர்படையணியின் 42 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூராஜ் பங்சஜய அவர்கள் தொண்டர்படையணியின் கேர்னல் ஒருங்கிணைப்பு அதிகாரி, கட்டளை அதிகாரிகள் மற்றும் சமீபத்தில் இலங்கை இராணுவ தொண்டர்படையணியில் கேர்னல் மற்றும் லெப்டினன் கேர்னல்நிலைகளுக்கு பதவியுயர்வு பெற்ற அதிகாரிகளுக்கும் உரையாற்றினார்.

இந்த உரை வியாழக்கிழமை (25) இலங்கை இராணுவ தொண்டர் படையின் புதிய “ரெண்டோஸ் மைதானம்அரங்கில் நடந்தது, அங்கு அவர்தன் உரையின் நோக்கத்தை விளக்கினார், நிறுவனத்திற்கு கேர்னல் ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரியின் நியமனங்களின் முக்கியத்துவத்தை சுட்டி காட்டினார்.

மேலும், அவரின் உரையில் தனது அடுத்த நிலைக்கு சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவர்கள் தங்கள் சேவைகளை படையணிக்கும், இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தலைமையகத்திற்கும் எவ்வாறு அதிக பொறுப்புடன் பங்களிக்க முடியும் என்பதை விளக்கினார். மேலும், இலங்கை இராணுவ தொண்டர் படையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார், “2020 க்கு அப்பால் தொண்டர் படையின்ஆராய்வு ஆவணத்தை வெளியிடுவது தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில்கேர்னல், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளிடம் தொண்டர் படையணிகள் மற்றும் அவர்களின் படையினர்களின் நிர்வாகதொடர்பான விடயங்கள்கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன. அதிகாரிகள், மற்றும் படையினருடன் பிரதி தளபதி பிற பொது விடயங்கள்தொடர்பாக தலைமையகத்தின் அந்தந்த கிளைத் தலைவர்கள் கேர்னல்ஒருங்கிணைப்பு அதிகாரிகள்,கட்டளை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் .

அதனைத் தொடர்ந்து,அனைத்து அதிகாரிகளும்இராணுவதொண்டர்படையணிவளாகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி செயல்முறைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த விரிவுரையில் பிரதிகட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.நுகேகொட, சிரேஷ்டஅதிகாரி பிரிகேடியர் கித்சிரி லியனகே மற்றும் இராணுவதொண்டர்படையணியின்சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். Best Sneakers | Air Max