Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2024 18:40:15 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் அதன் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உதவி

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கீழ் சேவையாற்றும் இராணுவ வீரர்களின் 150 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பண ஊக்குவிப்புகளை வழங்கும் நிகழ்வு 03 ஏப்ரல் 2024 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருகை தந்த பிரதம அதிதிக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினர் வாகன தொடரணிக்கு மரியாதை செலுத்தியதுடன், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு அவர்கள் வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றார்.

அன்றைய நிகழ்வுகள் மங்கல விளக்கு ஏற்றி வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பற்றிய சிறு ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. பின்னர், க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற 25 மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற 63 மாணவர்களுக்கு தலா. 25,000. ரூபாவும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற 112 மாணவர்களுக்கு. தலா 10,000 ரூபாவும், என நிகழ்வின் போது, 50 பிள்ளைகளுக்கு அடையாளமாக புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள தொகை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மூலம் ஏனைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மேலும் இராணுவத் தளபதி அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஒன்றுகூடி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் இணைந்தனர். இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர். சில்வா கேஎஸ்பீ மற்றும் மாணவர் ஒருவரினால் நன்றியுரை ஆற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பாடலைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இராணுவத் தளபதி தனது உரையில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் வளமான வரலாற்றைப் பற்றி நினைவு கூர்ந்தார், அவர்களின் தந்தையின் ஈடுபாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டினார். பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் தொடர ஊக்குவித்த அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்தினார்.

புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக்களை எழுதினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.