Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2025 15:04:41 Hours

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையரின் ஏற்பாட்டில் மகப்பேறு பொருள் நன்கொடை

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மதுவந்தி அம்பன்பொல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 5 வது இலங்கை இராணுவ சேவை படையணி படையினரின் ஏற்பாட்டில், இராணுவ சேவை படையணி உறுப்பினர்களின் கர்ப்பிணித் துணைவர்களுக்கு மகப்பேறு பொருள் நன்கொடை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 15 பௌத்த கன்னியாஸ்திரிகளுக்கு 2025 மார்ச் 29, அன்று இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தில் தானம் வழங்கப்பட்டது.

பௌத்த கன்னியாஸ்திரிகள் மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும், இலங்கை இராணுவ சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்ஜீஎ அம்பன்பொல, இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.