Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவ கால்பந்து விளையாட்டு அணி மற்றும் பூட்டான் பரோ கால்பந்து விளையாட்டு அணிக்கும் இடையில் நடைப்பெற்ற கால்பந்து போட்டி முடிவு

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கிண்ண (AFC) குழுவிற்கு கீழ் நடைப்பெற்ற கால்பந்து போட்டி இலங்கை இராணுவ கால்பந்து அணியின் மற்றும் இலங்கைக்கு வருகை தந்த பூட்டானின் பரோ கால்பந்து அணி வீரர்களுக்கும் இடையில் ஆரம்ப கால்பந்து போட்டி ஜனவரி மாதம் (22) ஆம் திகதி மாலை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைப் பெற்றன.

இப் போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்களைப் பதிவு செய்ததால் போட்டி சமமான முறையில் முடிந்தது.

அதனடிப்படையில், இப்போட்டிகள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கிண்ண (AFC) குழு கீழ் இடம் பெற்றதுடன், அவர்கள் மறுபடியும் ஜனவரி 29 ஆம் திகதி பூட்டனில் நடைப்பெற இருக்கும் போட்டியில் போட்டியிடவுள்ளனர்.

இந்த போட்டி நிகழ்விற்கு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனஹே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

டயலொக் சாம்பியன்ஸ் லீக் 2019 இல் அவர்கள் பதிவு செய்த சாதனைகளைத் தொடர்ந்து, இந்த போட்டிக்கு இராணுவ கால்பந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்தும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் AFC விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் உடன்பட்டன.

ஈரானில் இருந்து 4 நடுவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர், ஜோர்டானியன் உள்ளவர் போட்டியின் ஆணையராக பணியாற்றுவார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இலங்கை இராணுவத்தின் 18 கால்பந்து வீர்ர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்கள், நைஜீரியாவிலிருந்து 2 வீரர்களும், ககனாவைச் சேர்ந்த 1 வீரரும் இப்போட்டிகளில் போட்டியிட்டனர். இராணுவத் தளபதி மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளன அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் இராணுவ கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரிகேடியர் உபாலி குணசேகர அவர்களால் இப்போட்டிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசிய கால்பந்து கிண்ணம் என்பது ஆசிய கால்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆண்டுதோறும் நடைப்பெறும் போட்டியாகும், இப் போட்டியானது தற்போதைய விதிகளின்படி, ஆசிய கால்பந்து தரவரிசைகளை அடிப்படையாகக் கொண்ட தகுதி இடங்களைப் பெறாத நாடுகளுக்கிடையில் விளையாடப்படுகிறது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் கால்பந்து பிரியர்கள் போட்டியைக் பார்வையிட்டனர். Nike air jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov