31st May 2024 17:25:39 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 92ஏ, 93பி மற்றும் குறுகிய பாடநெறி 21 ஆகியவற்றின் பயிலிளவல் அதிகாரிகள் 2024 மே 30 மற்றும் 31 திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு அவர்களின் பாடத்திட்டதின் ஒரு பகுதியாக விஜயம் செய்தனர். இது கள அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையிலான விஜயமாகும். யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சார்பாக கேணல் பொது பணி கேணல் எஸ்டிகேடப்ளியூஎம்எம்ஐ வெலிவிட்ட ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பயிலிளவல் அதிகாரிகளை அன்புடன் வரவேற்றார்.
கென்யா, சாம்பியா, காம்பியா மற்றும் உகாண்டா ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகளும் 227 உள்நாட்டு பயிலிளவல் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். பொதுப்பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்), மேஜர் சி வீரதுங்க பீஎஸ்சி எஸ்எல்ஏசி, யாழ். குடாநாட்டின் பாதுகாப்புப் படைகளின் தோற்றம் மற்றும் அபிவிருத்திற்கான வகிப்பங்கு, பணிகள் சிவில் சமூகத்திற்கான சிவில் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட பயிலிளவல் அதிகாரி பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் ஏ.கே. வீரசிங்க யுஎஸ்பீ அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் யாழ். விஜயத்தினை குறிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரால் பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் முக்கியமாக தல்செவன இராணுவ ஓய்வு விடுதி, யாழ்ப்பாண நகரம், யாழ். கோட்டை, யாழ் நூலகம், ஜெனரல் டென்சில் கொப்பகடுவ நினைவுச்சின்னம், சிமிக் பூங்கா – 51 வது காலாட் படைப்பிரிவு, தம்பகொல பட்டிணம், சங்குபிட்டி பாலம், போர் வீரர்களின் நினைவு தூபி – ஆணையிறவு மற்றும் நினைவு தூபி – கிளிநொச்சி ஆகியவற்றையும் பார்வையிட்டனர். வருகை தந்த தூதுக்குழுவினருக்கு தல்செவன இராணுவ ஓய்வு விடுதியில் யாழ். பாதுகாப்புப் படைகளின் பணிநிலை அதிகாரிகளுடன் இரவு உணவு உட்கொள்வதற்கான ஒர் அரிய வாய்ப்பும் கிடைத்தது.
யாழ்.பாதுகாப்பு படை மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.