20th December 2021 06:51:26 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் போக்குவரத்து தேவைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு அவசியமான வாகன தேவைகளை நிவர்த்திக்கும் நோக்கில் இலங்கை மின்னியல் மற்றும் இயந்திய பொறியியல் படையணியினரால் புதுப்பிக்கப்பட்ட வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை (19) வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, டாடா ஸ்டார் பஸ், அசோக் லேலண்ட், டொயோட்டா கோஸ்டர், யூனிகோல்ட் டிரக் மற்றும் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட வாகனங்ளை பார்வையிட்டார். மேலும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலின் கீழ் மின்னியல் மற்றும் இயந்திய பொறிமுறை படையணியினரால் புதுப்பிக்கப்பட்ட ட்ரெக் மௌண்ட் மற்றும் ஹோர்ஸ் கெரியர் வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த வாகனங்களுக்கான உதிரிப் பாகங்களுக்கான செலவுகள் மாத்திரமே இராணுவத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தமையால் ஏனைய தொகை அரசாங்கத்திற்கு மிகுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த திட்டமானது இராணுவத் தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்மைய மின்னியல் பொறிமுறை இயந்திர படையணியினரால் மேற்கொள்ளப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் நலிந்த நியங்கொட அவர்களிடம் இவ் வாகனங்களுக்கான திறப்புகள் கையளிக்கப்பட்டன.
இதேவேளை, தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் அவர்களினால் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சமிஞ்ஞை மூலம் இயங்கும் சில தொடர்பாடல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.