Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2021 22:14:48 Hours

இலங்கை இராணுவ கல்லூரியின் முன்னாள் தளபதிக்கு வாழ்த்து

இலங்கை இராணுவ கல்லூரியின் 34 வது தளபதியாக 2020 பெப்ரவரி 07 முதல் 2021 ஜூலை 06 வரை பணியாற்றிய மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன புதன்கிழமை (7) புதிய பதவியினை பொறுப்பேற்பதற்காக தனது பழைய அலுவலக்க கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார்.

கடமைகளிலிருந்து விடுகை பெறுவதற்காக படைப்பிரிவு வளாகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், மரியாதை நிமித்தமான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை இராணுவ கல்லூரி வளாகத்தில் மரக் கன்று ஒன்றினை நாட்டி வைத்த அவர், கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அவர் இராணுவ தலைமையகம் மற்றும் இராணுவ தளபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கமைய இராணுவ கல்லூரியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயிற்சி கட்டமைப்புக்களின் தர மேம்பாடு தொடர்பிலும் அவர் நினைவுகூர்ந்தார்.

இறுதியாக இலங்கை இராணுவ கல்லூரியின் அனைத்து நிலையினரும் வெளிச்செல்லும் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன் அவர் 14 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.