Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th July 2021 13:00:09 Hours

இலங்கை இராணுவ கல்லூரியின் தளபதி கடமைகளை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ கல்லூரியின் 35 வது தளபதியாக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் நலிந்த நியங்கொட வௌ்ளிக்கிழமை (16) பதவியேற்றுக்கொண்டதோடு, அவருக்கு முறைப்படி வரவேற்பும் அளிக்கப்பட்டது.

ஆரம்ப கட்டமாக அவர் இலங்கை இராணுவ கல்லூரியின் “அமைதிக்கான நினைவுச்சின்னத்தில்” மலர் அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. இதன்போது நான்கு பயிற்சி பெரும் கெடட் அதிகாரிகளினால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதோடு, அதற்கான கட்டளைகள் கஜபா படையணியின் லெப்டினண் கேணல் எஸ்.டி.கே.டபிள்யூ.எம்.எம்.ஐ. வெலிவிட அவர்களால் வழங்கப்பட்டது.

அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற தனது முதலாவது உரையின் போது , இலங்கை இராணுவ கல்லூரியின் கெடட் அதிகாரிகள் கௌரவத்துடன் வாழ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர் கல்லூரியின் குறிக்கோளை அடைந்துகொள்ளகூடிய வகையில் சேவைகளை செய்யுமாறும் வலியுறுத்தினார். பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து பௌத்த பிக்குகளின் “செத் பிரித்” பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து பிரதி தளபதியினால் புதிய தளபதிக்கு சின்னம் அணிவிக்கப்பட்டு புதிய தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, முன்னைய தளபதியின் புகைப்படம் வெளியிடப்பட்ட பின்னர். அனைவரும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.

பின்னர், பிரிகேடியர் நலிந்த நியங்கொட, அனைத்து நிலைகளுக்குமான விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் பிரதி தளபதி மற்றும் கெடட் அதிகாரிகளும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.