Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2019 18:53:48 Hours

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யுத்தத்தின் போது உயிர்நீத்த் 3878 படையினர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2019 ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம் பெற்றது. அதற்கமைய இந்த படையணி ஒரு மதப் பிரிவுடன் கலக்கப்படுகின்றதுடன், இலங்கை இராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற படையணிகளில் ஒன்றான "நான் சேவை செய்கிறேன்" என்ற குறிக்கோளுடன் 1881 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயூத காலாட் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிஹே அவர்களின் அழைப்பை ஏற்று ஜெனரல் (ஓய்வு) சாந்தா கோட்டெகொட மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் பாதுகாப்பு செயலாளரும் கலந்து கொண்டார். இதன்போது நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் வருகை தந்நதுடன், மேலும் இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த ஜெனரல் (ஓய்வு) சாந்தா கோட்டெகொட மற்றும் இராணுவ தளபதி அவர்களை இலேசாயுத காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிஹே மற்றும் கட்டளை தளபதி கேர்ணல் அனுர திசாநாயக அவர்களால் வரவேற்கப்படுவதற்கு முன்னர் படையினரால் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவராலும் தேசிய கீதம், இராணுவ பாடல் மற்றும் படையணியின் கீதம் பாடப்பட்டதுடன் அன்றைய நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன், இலேசாயுத காலாட் படையணியின் தளபதி அவர்களால் இன்றய முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி சுருக்கமான வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அதன்பிறகு அவர்களின் தியாகங்களை நினைவுபடுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதி கட்டளை தளபதி அவர்களால் முறையான போர் வீரர்களின் உறுதிமொழியின் வாசிப்பு இடம் பெற்றது. பின்னர் பிரதான அதிதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் சில கருத்துகள் விரிவுரைக்கப்பட்டனர்.

பின்னர் பிரதம அதிதி அவர்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்த அழைக்கப்பட்டனர்.

அத்துடன் ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டேகொட மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இருவரும் இராணுவ சம்பிரதாய முறைப்படிக்கு ஏற்ப நினைவு தூபிக்கு லாஸ்ட் போஸ்ட் மற்றும் ரெவில்லே பின்னணியில் ஒழிக்கதொடங்கியதுடன் மலர் வைத்தது அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், போர் வீர்ர்களின் கண்ணீர் சிந்தும் பெற்றோர்கள், மகன் மகள்களும் உறவினர்களும் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, மகா சங்க பெளத்த தேரர்களின் ‘பிரித்’ பௌத்த பூஜையுடன் ‘ஹீல் தான (காலை உணவு) வழங்குவதன் மூலம் நிகழ்வு முடிவடைந்தது. Buy Kicks | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov