Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 18:08:02 Hours

இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு மையத்தின் பாடநெறி - எண் 10 ஆரம்பம்

கொத்மலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (28) அடிப்படை பேரிடர் மீட்பு பாடநெறி எண் - 10 பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு பயிற்சி நிலையத்தின் தளபதி கேணல் அனில் சோமவீர அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 1 ஆம் இராணுவ படையணியின் 58 வது படைப்பிரிவு ஆகியவற்றை சேர்ந்த 05 அதிகாரிகளும் 136 சிப்பாய்களும் பாடநெறி எண் – 10 இல் கலந்துகொண்டனர்.

9இப்பயிற்சிகள் 2021 டிசம்பர் 20 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதோடு, நாட்டில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை கையாளும் போதான இராணுவ வீரர்களின் திறன்களைக் மேம்படுத்தல் மற்றும் அது தொடர்பிலான உளச்சார்பு திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கில் பேரிடர் தவிர்ப்பு பயிற்சி நிலையத்தினால் மேற்படி பாடநெறி முன்னெடுக்கப்படுகிறது.