Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2020 14:50:04 Hours

இலங்கை இராணுவ அக்கடமியின் புதிய தளபதி கடமைப் பொறுப்பேற்பு

தியத்தலாவையில் உள்ள இலங்கை இராணுவ அக்கடமியின் 34ஆவது புதிய தளபதியாக, பிரிகேடியர் ஏகேஜிகேயு குணரத்ன அவர்கள் வெள்ளிக் கிழமை (07) ஆம் திகதி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தளபதியவர்கள் உயிர் நீத்த படையினருக்கான மலர் மாலை அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து அக்கடமியின் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

மேலும் இவ் அக்கடமியின் புதிய தளபதியவர்கள், இவ் அக்கடமியில் 32 வருடங்களிற்கு முன்னர் பயிற்சிகளைப் பெற்ற அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் மத அனுஷ்டனாங்களுக்கு மத்தியில் செத் பிரித் வழிபாடுகளுடன் தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் அதனைத் தொடர்ந்து இப் புதிய தளபதியவர்கள் அக்கடமியின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரையை நிகழ்த்தினார். ஒருங்கிணைப்பு குழச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற முடியுமென தெரிவித்த அவர் எதிர்காலத்தில் தாம் சிறப்பாக செயலாற்ற தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் பிரதி கட்டளை தளபதி; ஆகியோர்; அக்கடமியின் புதிய தளபதியவர்களுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். Buy Kicks | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov