Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2024 08:31:42 Hours

இலங்கை இராணுவம் கணக்காய்வு நியதி மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு

இலங்கை இராணுவ நிதி நியதி மற்றும் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இன்று (நவம்பர் 06) இராணுவத் தலைமையகத்தில் கணக்காய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களத்தின் சிறப்பு வளவாளர்களால் நடாத்தப்பட்ட இந்த செயலமர்வில், இலங்கை இராணுவத்திற்குள் வரவு செலவுத் திட்டமிடல், கொள்வனவு மற்றும் நிதி மேற்பார்வையில் நேரடியாக ஈடுபட்டுள்ள இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, முதன்மை பணிநிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ.டி குரும்பலபிட்டிய (கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்), மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி ஜி.பி.சம்பிகா (கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்), பணிப்பாளர் திரு. ஜே.பீ.சுனில், (கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்), பணிப்பாளர் திரு.பி.ஜி.திசார (கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்) மற்றும் பிரதி பணிப்பாளர் திருமதி யு.பீ. விஜயஹேவா (கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்) உள்ளிட்ட கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தமது நிபுணத்துவத்தை வழங்கினர்.

இந்தத் திட்டம் இராணுவத்தின் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறைகள் குறித்த நிபுணத்துவ அறிவுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இராணுவத்திற்குள் நிதி மற்றும் கொள்முதல் நிர்வாகத்தை மேம்படுத்த நிதி ஒழுங்குமுறைகள், கொள்முதல் வழிகாட்டுதல்கள் மற்றும் பிற சுற்றறிக்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. கலந்துரையமர்லில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் கலந்துரையாடப்பட்டன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான பங்களிப்பைப் பாராட்டி, கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களத்தின் வளவாளர்களுக்கு இராணுவத் தளபதி விசேட நினைவுச் சின்னங்களை வழங்கினார்.