Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2024 07:43:35 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியின் தலைமையில் தேசிய தொழிற்தகமை சான்றிதழ் வழங்கல்

மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றதை தொடர்ந்து 03 செப்டம்பர் 2024 அன்று தியத்தலாவ இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலைக்கு முதல் விஜயத்தைக் மேற்கொண்டார். இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி ஜேஎஜே ஜயரத்ன கேஎஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியின் வருகையைதொடர்ந்து இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி மரியாதையுடன் வரவேற்றார், அதன் பின்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்று நட்டுவைத்த அவர் குழு படம் எடுத்துகொண்டார்.

அன்றைய நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் ஆரம்பம் மற்றும் பெருமைமிக்க வரலாறு தொடர்பில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி சுருக்கமான உரையை நிகழ்த்தினார்.

பின்னர், நிர்வாக உதவியாளர் பாடநெறியின் மாணவர்கள் தயாரித்த விளக்கக்காட்சி மேடையில் காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியினால் தேசிய தொழிற்தகமை நிலை 3 மற்றும் 4 பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்படி, நிர்வாக உதவியாளர் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 36 மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றனர்.

பின்னர், தொண்டர் படையினர்களின் பயிற்சி தரத்தை உயர்த்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இராணுவத் தொண்டர் படையணி தளபதியினால் ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தப்பட்டது.

பின்னர் பயிற்சி பாடசாலை வளாகத்தை பார்வையிட்டு, பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக உறுதியளித்தார். பின்னர், மாணவர்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் உடற்பயிற்சி கூடத்திற்கு டிரெட்மில் உடற் பயிற்சி இயந்திரத்தை வழங்கினார்.

நிகழ்வின் கடைசிப் பகுதியாக, இரு தரப்பினராலும் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் இராணுவத் தொண்டர் படையணி பிரிகேடியர் (நிர்வாகம்) , கேணல் (பயிற்சி), கேணல் (வழங்கல்) மற்றும் தொண்டர் படையணி பயிற்சி பாடசலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.