09th October 2023 21:59:05 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியான ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் டி.எம்.கே.டி.பி புஸ்ஸல்ல ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ அவர்களுக்கு கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 06 பிரியாவிடை மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்.டிகே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இதன்போது நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக, பரம வீர விபூஷணய தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், அவர் குழு படம் எடுத்து கொள்ளும் முன், மரியாதை அணிவகுப்பிற்கு அழைக்கப்பட்டார். பின்னர், அவர் தனது கடமைகளை ஒப்படைத்ததுடன், அவரது உருவப்படத்தினை நினைவுப் பரசாக அவரது அலுவலகத்தில் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் மதிய உணவிற்காக அனைத்து நிலையினருடனும் இணைந்து கொண்டதுடன், இராணுவத் தொண்டர் படையணியில் அவர் பணிபுரிந்ததன் நினைவின் அடையாளமாக அனைத்து நிலையினரிடமும் பாராட்டுகளை பெற்றார்.
உத்தியோகபூர்வ உரையின் போது, அவர் மறைந்த போர்வீரர்களையும் நினைவு கூர்ந்தார், இந்த மதிப்புமிக்க ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த்துடன் எதிர்கால முயற்சிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், வெளியேறும் தளபதி தனது பதவிக் காலத்தில் நிறுவன நோக்கங்களை நிறைவேற்றுவதில் தன்னுடன் ஒருங்கிணைத்த இராணுவத் தொண்டர் படையணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் டி.எம்.கே.டி.பி புஸ்ஸல்ல ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ அவர்கள் செல்வதற்கு முன் பிரதான வாயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த அதிகாரிகள் மற்றும் படையினரின் குட்-பை ஆரவாரங்களுக்கு மத்தியில் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. இந் நிகழ்வில் இராணுவத் தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.