08th November 2024 14:53:27 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் 2024 நவம்பர் 5 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி தொழில் நிபுணத்துவ பயிலிளவல் அதிகாரி பாடநெறி 1 ஆம் கட்டத்தை நிறைவு செய்து அதிகாரவாணை வழங்கப்பட்ட 18 அதிகாரிகளுக்கான வரவேற்பு விழா நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொறுப்புகளை மையமாகக் கொண்டு அதிகாரிகளுக்கு உரையாற்றினார். பல்வேறு துறைகளில் இந்த அதிகாரிகள் கொண்டு வரும் மதிப்புமிக்க நிபுணத்துவத்தையும் இராணுவத்தின் இலக்குகளுக்கு அவர்களின் சாத்தியமான பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டினார்.
புதிய அதிகாரிகளின் உற்சாகத்திற்கு தளபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். அவர்களின் தொழில்முறைத் திறனைப் பாராட்டி, அவர்களின் இராணுவப் பணிகளில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.